0
checked

Tamilnadu Politics

submitted 5 months ago, Monday, Nov 6, 2017, 04:04:46 by dailythandi4 in Society
Tamilnadu Politics
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்டு மாதம் 31–ந்தேதி முதல் இதுவரை ராமேசுவரத்தை சேர்ந்த 29 பேர், மண்டபத்தை சேர்ந்த 8 பேர், நாகபட்டினத்தை சேர்ந்த 12 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 26 பேர், காரைக்காலை சேர்ந்த 10 பேர் என மொத்தம் 85 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண இருநாட்டு அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், இலங்கை கடற்படை தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் சார்பில் நிரபராதி மீனவர் கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் கூறியதாவது:– இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்திய அரசும், இலங்கை அரசும் அவ்வப்போது அதிகாரிகள் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. மேலும் இருநாட்டு மீனவர்கள் சார்பிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டுஉள்ளன. இதனால் எவ்வித பயனும் இல்லை. தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களையும், படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இலங்கை கடற்படையினர் இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

இதுகுறித்து மண்டபம் மற்றும் சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இந்த பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவது மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு இதுதொடர்பாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டம் தொடங்கும் வகையில் மீனவர்கள் நிம்மதியாக இலங்கை கடற்படையினரின் தொல்லையில்லாமல் மீன்பிடிக்க மத்திய–மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
rated 0 times (+0)  (-0) - comments: 0 - hits: 42 - www.dailythanthi.com

Comments

There are no comments for this article.
Only authorized users can leave comments. Please sign in first, or register a free account.
 
Share
Sponsor
Published By
dailythandi4

dailythandi4

Member since Aug 7, 2017
Location: n/a
Following
User not following anyone yet.
You might also like
Online NewsPaper
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இந்தியா-பூடான்- சீனா ஆகியவற்றின் முச்சந்திப்பு எல்லை அருகே டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு 2012-ம் ஆண்டு இந்தியா அமைத்த 2 பதுங்குகுழிகளை...
Tamil Newspaper
ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது கடந்த 2007–ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் ரூ.350 கோடி அளவுக்கு வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு...
Tamil News
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. இதனால் அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயரை பயன்படுத்த தடை விதித்த தேர்தல் கமிஷன், அக்கட்சியின்...
Tamilnadu Newspaper
உலக அளவில் வளரும் நாடுகளின் பட்டினி அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் உள்ள 119 நாடுகளில் இந்தியா 100 வது இடம் பெற்றும் பின்னடவை...
Tamil News
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி போயர்தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர்...
Latest Tamil News
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கேன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து...
Tamil Newspaper
காதலின் சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்கி வரும் தாஜ்மகால் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் அமைந்துள்ளது. சமீபத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு வெளியிட்ட...
Tamil Newspaper
இந்தியாவில் மருத்துவ சிகிச்சை வேண்டி வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பலர் விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அந்தவகையில் ஏராளமான மனுக்கள் இந்திய வெளியுறவு துறையில் கிடப்பில் உள்ளன....