Online NewsPaper

2 weeks ago, Mon, Aug 7, 2017, 02:04:26
Online NewsPaper
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இந்தியா-பூடான்- சீனா ஆகியவற்றின் முச்சந்திப்பு எல்லை அருகே டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு 2012-ம் ஆண்டு இந்தியா அமைத்த 2 பதுங்குகுழிகளை அண்மையில் சீனா அழித்தது. மேற்கொண்டு சீன ராணுவம் சேதம் விளைவிப்பதையும், ஊடுருவுவதை தடுக்கவும் அங்கு இந்தியா ராணுவத்தை குவித்து உள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த படைகளை திரும்பப் பெறுமாறு சீனா வற்புறுத்தி வருகிறது.இதனால் எல்லை பகுதியில் பதட்டம் ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் சீன அரசின் ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:- ''டோக்லாம் விவகாரத்தில் சீனா பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளது. இந்தியாவோ பொறுப்பில்லாமல் போர் ஏற்படுத்துவதற்காக சூழலை ஏற்படுத்துகிறது. போர் ஏற்பட்டால், அதை நிறுத்தும் சக்தி இந்தியாவுக்கு இல்லை. அதிக சக்தி கொண்ட சர்வ வல்லமை படைத்த ஒரு நாட்டுடன் இந்தியா மோதிக்கொண்டிருக்கிறது.

Comments