Tamil Newspaper

2 months ago, Wed, Oct 4, 2017, 22:19:51
Tamil Newspaper
ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது கடந்த 2007–ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் ரூ.350 கோடி அளவுக்கு வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்ததில் முறைகேடு நடந்ததாகவும், இதில் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல், இந்த சம்மனை தள்ளுபடி செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே, கார்த்தி சிதம்பரம் இந்தியாவை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் அவரை தேடப்படும் நபராக அறிவித்து கடந்த ஜூன் 16–ந் தேதி சி.பி.ஐ. அறிக்கை (லுக் அவுட் நோட்டீஸ்) வெளியிட்டது. அந்த தேடல் அறிக்கைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை உருவானது. சி.பி.ஐ. தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Comments