Tamilnadu Newspaper

2 months ago, Mon, Oct 23, 2017, 22:09:57
Tamilnadu Newspaper
காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண மத்திய அரசு சார்பில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராஜ்நாத்சிங் கூறியதாவது:-, ''காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் தினேஷ்வர் சர்மா இதற்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1979-வது பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சர்மா, 2014- 16 வரை உளவுத்துறை இயக்குநராகப் பணியாற்றியவர். காஷ்மீர் தலைவர்கள் யாருடனெல்லாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்” இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Comments