Nilgiris District Tamil News

4 weeks ago, Tue, Oct 24, 2017, 21:56:41
Nilgiris District Tamil News
கோத்தகிரி அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் பெட்டட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த பள்ளியின் மேற்கூரைகளின் ஓடுகள் உடைந்து காணப்படுகின்றன. இதனால் வகுப்பறைக்குள் மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமமடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை பள்ளி மாணவர்கள் சிலர், மேற்கூரையின் மீது அமர்ந்து உடைந்த ஓடுகளை அகற்றிக்கொண்டு இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களிடம் இது குறித்து கேட்டதுடன், கண்டனம் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் உடைந்த ஓடுகளை அகற்ற கூறியதாக தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments