Tirupur District Tamil News

2 months ago, Wed, Oct 25, 2017, 23:17:42
Tirupur District Tamil News
திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சாதிக் பாஷா(வயது 44). இவர் தள்ளுவண்டியில் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் நாகராஜனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனக்கு 13 வயதில் சுமையா என்ற மகள் உள்ளாள். அவளை திருப்பூரில் உள்ள மதபாடசாலை ஒன்றில் சேர்த்தேன். அந்த மதபாடசாலை ஆசிரியர் எனது மகள் கையில் சூடுவைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

Comments