Tamil news paper

3 weeks ago, Tue, Oct 31, 2017, 02:47:30
Tamil news paper
சர்தார் வல்லபாய் பட்டேலின் 142வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 33-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பீகாரில் மாநில கவர்னர் சத்திய பால் மாலிக் மற்றும்முதல்-மந்திரி நிதீஷ் குமார் ஆகியோர் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைதொடர்ந்து இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த படத்திற்கு (IGIMS) மலர் தூவி மரியாதை செலுத்தினர். அக்டோபர் 31-ம் தேதி (சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்) நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments