Tamil Newspaper

4 months ago, Wed, Nov 8, 2017, 23:46:22
Tamil Newspaper
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி அதிரடியாக அறிவித்தது. இதனால், பொதுமக்கள் அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். மத்திய அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்தது. இதையொட்டி நேற்று, கருப்பு தினமாக கடைபிடித்து எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுபோல், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

Comments