Tamil news online

2 weeks ago, Fri, Nov 10, 2017, 06:10:31
Tamil news online
இந்திய ராணுவத்தில் ஆயுதப்பற்றாக்குறை இல்லை என்று ராணுவ தளபதி பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் கோர்கா ரைபிள்ஸ் பயிற்சிமுகாம் மற்றும் கோர்கா ரைபிள்ஸ் இருநுறாம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணுவ தளபதி பிபின் ராவத் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், “ ராணுவத்தில் ஆயுத பற்றாக்குறை எதுவும் இல்லை. ராணுவத்தில் ஆயுதங்களை நவீனமயமாக்கி வருகிறோம். ஆயுத தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய மற்றும் நவீன தொழில்நுட்ப யுக்திகளை கொண்டு வரும் முயற்சியில் உள்ளோம்.

Comments