Tamil News

4 weeks ago, Mon, Nov 13, 2017, 21:44:47
Tamil News
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி போயர்தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பொட்டிரெட்டிப்பட்டி போயர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி கடந்த 15 ஆண்டுகளாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை தங்களிடம் (கலெக்டர்) மனு கொடுத்தோம். இதையடுத்து எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தற்காலிகமாக குடிநீர் வழங்கப்பட்டது.

Comments